தெருநாய்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
அன்று விடுமுறை தினம் என்பதால் சிறிது நேரம் கூட உறங்கலாம் என்று நினைத்த ஜெனிக்கு ஏனோ உறக்கம் வரவில்லை .மழை வேறு ‘சோ’ வென்று பெய்துகொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அந்த விடிகாலைப் பொழுதில் மிக மெல்லிய குரலில் நாய்க்குட்டிகளின் முனகல் சப்தம் கேட்டது.தொடர்ந்து அவற்றின் முனகல் சப்தம் கேட்கவே ,
படுக்கையை விட்டு எழுந்த ஜெனி எங்கிருந்து இந்த சப்தம் வருகிறது? என்று யோசித்தவாறே வீட்டின் பின்புற கதவைத் திறந்து ,அங்கிருந்த விளக்கை ஒளிர விட்டாள்.அப்போது அங்கே பிறந்து ஒரிருநாட்களேயான இரண்டு நாய்க்குட்டிகள் கொட்டும் மழையில், சொட்டச் சொட்ட நனைந்த நிலையில் செய்வதறியாது நின்றுகொண்டிருப்பதை பார்த்த ஜெனிக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது.அவை இரண்டும் வெவ்வேறு நிறங்களில் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.
ஜெனிக்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியம்.ஜெனியின் வீடு மேல்தளத்தில் இருந்ததால் என்ன செய்வது என்று யோசித்தவாரே அந்தக்குட்டிகளைப் பார்த்து கைகளை அசைத்து, ‘ச் ச் ச்’ என்று கூப்பிட்டாள். ஏற்கனவே மழையில் நனைந்திருந்த அந்த நாய்க்குட்டிகள் ஜெனியின் சப்தம் கேட்டதும் அவளைப் பார்த்தவாரே அங்கிருந்து பயந்து ஓடிவிட்டன. பொழுது அப்பொழுதுதான் சிறிது விடிய ஆரம்பித்திருந்தது.ஜெனிக்கு அதன் பிறகு உறங்கத்தோன்றவில்லை.எனவே, சாமி படத்தின் முன்னால் நின்று ஆண்டவா எப்படியாவது அவற்றைக்காப்பாற்று என்று வேண்டிக்கொண்டாள்.
அதன் பிறகு சில நாட்களுக்கு ஜெனியின் கண்களில் அந்த நாய்க் குட்டிகள் தென்படவேயில்லை. ஜெனியின் வீட்டுக்கு அருகில் ஒரு காலி சைட் இருந்தது.அது முழுவதும் புதர்களும் முட்களும் நிறைந்திருந்தது. ஒரு சில வாரங்களுக்கு பிறகு அந்த இடத்திலிருந்து , ஏற்கனவே ஜெனி பார்த்திருந்த இரண்டு நாய்க் குட்டிகளுடன் மேலும் இரண்டு நாய்க் குட்டிகள் ஒவ்வொன்ராய் வெளியே வர ஆரம்பித்தன.தொடர் மழையிலும் எப்படியோ அவை பிழைத்திருந்தன. இதைக் கண்ட ஜெனி மிகுதியாய் மகிழ்ச்சியடைந்தாள். தினமும் பாலும் சோறும் காலை மாலை என வைத்து வந்தாள்.அவற்றிற்கு ஜிம்மி, ப்ரௌனி,மௌனி, குச்சி என்று பெயர் வைத்தாள்.நான்கு குட்டிகளில் ஜிம்மி மிகவும் ஸ்மார்ட். யாரைப் பார்த்தாலும் வாலைஆட்டிக்கொண்டு அவர்கள் அருகில் தைரியமாய் நிற்பாள்.அத்துடன் ஏரியா கிங்கும் ஜிம்மி தான்.புதிதாக ஒரு நாய் அந்த வழியில் வந்தால் போதும், அதன் உருவத்துக்கு சம்மந்தமேயில்லாமல், ஏதோ பெரிய நாய் போல் குரைத்துத் துரத்துவாள். கடைக்குட்டியை ஜெனி, மௌனி என்று அழைத்தாள். அவள் எப்போதும் அமைதியாகவே இருப்பாள்.அந்த மௌனிக்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. புதருக்குள் கோழிகளும் மேய்ந்து வந்ததால், அவைகள் இந்த மௌனியை க் கொத்திக் கொத்தி உடல் முழுவதும் காயமாக இருந்தது .நொண்டி நொண்டி நடப்பதுடன்,மிகவும் பயந்தும் போயிருந்தாள். ப்ரௌனி நல்ல அழகுடன் கொஞ்சம் புஷ்டியாகவும் இருப்பாள்.பரமசாது. குச்சி பெயருக்கேற்றார்போல் மிகவும் ஒல்லியாக இருப்பாள்.இவளுடைய வால் தென்னங்கீற்றில் செய்யப்படும் சீமார் குச்சியை ப் போல் இருக்கும். தாய் நாய் விட்டுச்சென்றதால்,இவைகள் போதிய உணவின்றி தவித்து வந்தன.ஜெனியினைத்தவிர ஒரு சிலர் எப்போதாவாவது அவற்றிற்கு உணவளிப்பதுண்டு. ஜெனியின் வீட்டின் கீழ் தளத்தில் குடியிருப்போர் ஜெர்மன் ஷெபர்ட் நாய்க்குட்டியை வளர்த்துவந்தனர்.அதுவும் ஜெனியிடம் மிகுந்த அன்போடு பழகும்.ஜிம்மியும்,குச்சியும் அவ்வப்போது உணவிற்காக ஜெனியைத்தேடி அவள் வீட்டின் கேட்டினைப்பிஞ்சுக்கரங்களால்பிடித்தவாரு நிற்பார்கள்.அப்படி வரும்பொழுது ஜெர்மன் ஷெபர்ட் அந்த நாய்குட்டிகளை ப் பார்த்துக் குறைக்கும்.பின்னர் மெதுவாக அவைகளின் வாலை நக்கும்.அவைகளின் கரங்களை லேசாகத்தொட்டுத்தொட்டுப்பார்க்கும். இதைப்பார்க்கும்பொழுதெல்லாம் ஜெனிக்கு அட,இவைகள் மனிதர்களைப்போல் பேதம் பார்ப்பது இல்லையே என்று ஆச்சர்யமாயிருக்கும். ஜிம்மியும், குச்சியும், ஜெர்மன் ஷெபர்டின் செழிப்பான,கம்பீரமான,உயரமான த்
தோற்றத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். சிலநாட்கள் இப்படியே நகர்ந்தன.ஜெனி தினமும் வேலைக்கு செல்லும்பொழுது தைரியசாலியான ஜிம்மி மட்டும் ஓடி வந்து வாலை ஆட்டிக்கொண்டு அவள் பின்னால் சில அடிகள் எடுத்து வைப்பாள்.ஜெனி உடனே திரும்பிப்பார்த்து அதனுடைய தலையை செல்லமாய் த்தடவி “போ” என்று சொன்னால், அது சற்று தயங்கித்தயங்கி திரும்பிப்போய்விடும்.தான் பணிபுரியும் இடத்திலெல்லாம் இந்தக்குட்டிகளைப்பற்றி சொல்லிச்சொல்லி சந்தோஷப்பட்ட ஜெனி, இரவுநேரத்தில் வீடு திரும்பும் கணவரிடம் இவைகளின் புராணத்தை சொல்லிமுடித்தபிறகே உணவு பரிமருவாள் .
சிலநாட்களுக்குபிறகு, ஒரு நாள் வழக்கம் போல் அவைகளுக்கு உணவு வைக்கச்சென்றபோது அங்கு ஜிம்மியை மட்டும் காணவில்லை.ஜெனி அக்கம் பக்கத்தில் விசாரித்தபொழுது மதியத்திற்குப்பிறகு யாரும் பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜிம்மி புதர் போல் இருந்தஅந்தக் காலி சைட்டில் இறந்த நிலையில் கிடந்ததாகக் கூரப்பட்டது. அக்கம் பக்கத்தினர், ஜிம்மி எப்படிஇறந்தது என்று தெரியவில்லை என்றார்கள். ஜெனியால் இதைத்தாங்கிக்கொள்ளமுடியவில்லை.அதன்
பிறகு நடக்க முடியாத மௌனியின் உடல் முழுவதும் கொப்புளங்கள் வர ஆரம்பித்தன. ஏற்கனவே
கோழிகள் கொத்திய காயம் வேறு உடல் முழுவதும் இருந்தது.அதனால் மௌனி மிகவும் சிரமப்பட
ஆரம்பித்தது. தினமும் விடாமல் மழை வேறு பெய்து கொண்டிருந்ததால்,ஜெனி துணிகளைக்கொண்டுவந்து ஒருஇடத்தில் போட்டு அதன்
மேல் மௌனியைப்படுக்க வைத்தாள்.சிலநாட்கள் கழிந்தன.மௌனியின் உடல்நிலை மோசமானது,ஜெனி
அருகில் சென்று பாலை வைக்கும் போது மிக சிரமப்பட்டு த் தலையைதூக்கி பாலைக்
குடித்தது. எதிர்த்த வீட்டுக்காரர் கோழிகளை வளர்த்துவந்தார். அவருக்கு இந்த
நோயாளியான மௌனியைப் பார்க்கப் பிடிக்கவில்லை.ஒரு நாள் அதன் உடலை ஈக்கள் மொய்ப்பதைப்ப்பார்த்து, தான்
குடித்துக்கொண்டிருந்த பீடியை ஒரு கையில் பிடித்தவாரே, மற்றோர் கையில் ஒரு துண்டுத்துணியால்
மௌனியைத்தூக்கி மண்ணில் வேகமாகப் போட்டார். வலியால் துடித்த மௌனி ஈனஸ்வரத்தில் குரைத்து தலையை ஆக்ரோஷமாக திருப்பித் தன்னுடைய எதிர்ப்பைக்காட்டியது.இதைப்பர்த்துக்கொண்டிருந்த
ஜெனியும்,கீழ் வீட்டுக்காரப்பெண்மணியும், உடனே அவரிடம் பாவம் அதை விட்டு விடுங்கள்
என்று கெஞ்சினர். அந்த எதிர்வீட்டுக்காரர் உடனே கோபத்தோடு அங்கிருந்து போய்விட்டார்.ஆனால்
சிறிது நேரத்திற்கு பிறகு ஜெனி வந்து பார்த்தபொழுது மௌனியைக்காணவில்லை. ஜெனிக்கு என்ன
நேர்ந்திருக்கும் என்று புரிந்தது.அடுத்தநாள் அந்த எதிர் வீடுக்காரரை ஜெனி பார்த்த
பொழுது, அவர் எதையோ சாதித்து விட்டதைப்போல் அவளைப் பார்த்தார்.பிடிக்கவில்லையென்றால்
மனிதர்களையே விட்டுவைக்காத உலகம் இது. நாய்க்குட்டிகளை மட்டும் விட்டுவைப்பார்களா
என்ன ,அதுவும் தெரு நாய்களை என்று மனதிற்குள் புலம்பியவாறு மிகுந்த வேதனையுடன் வீட்டினுள்
சென்ராள் ஜெனி. எஞ்சியது குச்சியும், ப்ரௌனியும் தான்.சில நாட்கள் இப்படியே
நகர்ந்தன.ஜெனி வேலையின் நிமித்தமாக மூன்று நாள் வெளியூர் செல்ல நேர்ந்தது.எனவே,
அக்கம்பக்கத்தாரிடம் நான் வரும்வரை இவைகளுக்கு கொஞ்சம் சோறு வையுங்கள் என்று
சொல்லி விட்டுச்சென்றாள். வெளியூரிலிருந்து வந்த ஜெனி,நாய்குட்டிகள்
என்னாயிருக்குமோ என்ற கவலையுடன் அவைகளுக்கு உணவை வைக்க ச் சென்றாள்.வழக்கம்போல் ‘ச் ச் ச்’ என்று அழைத்தாள்.ஜெனியின் குரலைக்கேட்டு பயந்து
பயந்து குச்சி மட்டும் வெளியே வந்தது.அதன் முகத்தில் அப்படிஒரு பயம். ப்ரௌனியைக் காணவில்லை.ஜெனிக்கு யாரிடமும்
எதுவும் கேட்கத்தோன்றவில்லை.கவலையுடன் வீட்டிற்குள் சென்றாள். இரவு பணி முடிந்து
வீடு திரும்பிய கணவரிடம் ப்ரௌனி காணாமல் போனது குறித்து சொல்லிச் சொல்லிப்
புலம்பினாள் சிலநாட்களுக்குப் பிறகு, அந்த காலிசைட்டிலிருந்து துர்நாற்றம் வீச
ஆரம்பித்தது.ஜெனிக்கு புரிந்து விட்டது.ப்ரௌனியும் இறந்து விட்டது என்று.
துப்புரவு பணியாளர்கள் ப்ரௌனியின் உடலை எடுத்துச் சென்றனர்.குச்சியைத்தவிர எல்லாக்
குட்டிகளும் போய்சேர்ந்து விட்டதே என்று ஜெனி மிகவும் கவலைப்பட்டாள்.அதன் பிறகு ஓரிரு
நாட்கள் மட்டுமே ஜெனியின் கண்களில் குச்சி தென்பட்டது. அதன் பின் குச்சியும்
காணவில்லை.என்றாலும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தினமும் பால் சோறு வைத்துவந்தாள்
ஜெனி. ஆயூத பூஜை விடுமுறையில் துவங்கிய இந்த நாய்க்குட்டிகளின் பயணம் கிறிஸ்துமஸ்
விடுமுறையின் போது முடிவடைந்திருந்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். ஏன்
இந்த மனித சமுதாயம் தன்னுடன் வாழும் சக ஜீவராசிகளைக் கண்டு கொள்ளாமல்
வாழ்கிறது? அந்தக் காலத்தில் அரிசி மாவு கோலம் போடுவதில் கூட ஒரு ஈகையை கடைபிடித்துவந்தார்கள்
நம் முன்னோர்கள். அது மட்டுமல்லாமல் இரவு
நேரங்களில் மீதமாகும் உணவை வாசலில் ஒரு ஓரத்தில் வைப்பார்கள். ஆனால் இன்று எங்கும்
எதிலும் சுயநலம் மேலோங்கிவிட்டதே? நாகரிகம் என்ற பெயரில் நாமே அவற்றைத் தெரு
நாய்கள்தானே என்று ஒதுக்குவது சரியா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நாட்டு
நாய்களையும்,நாட்டுமாடுகளையும் பாதுகாப்போம் என்று கோஷம் போட்ட நாம் என்ன
செய்துகொண்டு இருக்கிறோம்? என்று கலங்கிய கண்களுடன் யோசித்தவாரே ஜெனி
தேவாலயத்திலிருந்து வீடு திரும்பினாள்.ஒவ்வொரு நாளும் ஜெனி அந்த காலி சைட் வழியாக வேலைக்குச்செல்லும்போது நான்கு குட்டிகளையும்
நினைத்து அவளையும் அறியாமல் கண்கள் அந்த இடத்தைக்கவலையுடன் பார்க்கின்றன.
Very interesting
ReplyDeleteThank You
DeleteExtraordinary mam
ReplyDeleteThank You
DeleteKindly watch animal aid unlimited, india you tube channel to know what is humanity 😔
ReplyDeleteOK Thank You
DeleteExtraordinary work mam
ReplyDeleteஅருமை ! மேலும் பல கதைகளை எதிர்நோக்கியிருக்கிறோம் .
ReplyDelete