Skip to main content

Posts

Showing posts from January, 2020
          தெருநாய்களைத் தெரிந்து கொள்ளுங்கள் அன்று விடுமுறை தினம் என்பதால் சிறிது நேரம் கூட உறங்கலாம் என்று நினைத்த ஜெனிக்கு ஏனோ உறக்கம் வரவில்லை . மழை வேறு ‘ சோ ’ வென்று பெய்துகொண்டிருந்தது . அதுமட்டுமல்லாமல் , அந்த விடிகாலைப் பொழுதில் மிக மெல்லிய குரலில் நாய்க்குட்டிகளின் முனகல் சப்தம் கேட்டது . தொடர்ந்து அவற்றின் முனகல் சப்தம் கேட்கவே , படுக்கையை விட்டு எழுந்த ஜெனி எங்கிருந்து இந்த சப்தம் வருகிறது ? என்று யோசித்தவாறே வீட்டின் பின்புற கதவைத் திறந்து , அங்கிருந்த விளக்கை ஒளிர விட்டாள் . அப்போது அங்கே பிறந்து ஒரிருநாட்களேயான இரண்டு நாய்க்குட்டிகள் கொட்டும் மழையில் , சொட்டச் சொட்ட நனைந்த நிலையில் செய்வதறியாது நின்றுகொண்டிருப்பதை பார்த்த ஜெனிக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது . அவை இரண்டும் வெவ்வேறு நிறங்களில் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது .   ஜெனிக்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியம் . ஜெனியின் வீடு மேல்தளத்தில் இருந்ததால் என்ன செய்வது என்று யோசித்தவாரே அந்தக்குட்டிகளைப் பார்த்து கைகளை அ